இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தற்போது நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

சலரீ, மவுஸாகலை,கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் சமனலவௌ நீர்த்தேக்க பகுதிகளில அதிகளவான மழை பெய்துள்ளமையினால் குறித்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்இ எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் நீர் மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.