இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை  நடைபெறவுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது எழுந்துள்ள பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.