இலங்கை எரிபொருள் சந்தையில் இரு வெளிநாட்டு நிறுவனங்கள்

இலங்கை எரிபொருள் சந்தையில் சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்..எம் பார்க்ஸ்-ஷெல் ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற அண்மையை கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .

இங்கு நடைமுறையில் உள்ள QR கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து இந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு நிறுவனங்களுடனும் அடுத்த மாத தொடக்கத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தின் சாதாரண பரப்பளவு சுமார் 40 பேர்ச் ஆகும். ஆனால் அத்தகைய ஒவ்வொரு நிலையத்திற்கும் சுமார் 1 ½ ஏக்கர் வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டம் பெரும்பாலும் வெளியூர் எரிபொருள் நிலையங்களுக்குப் பொருந்தும். கொழும்பில், காணி கிடைக்கப்பெறும் அடிப்படையில் அது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமையும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க