
இலங்கை அணி வீரருக்கு கொரோனா தொற்று
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குசல் ஜனித் பெரேரா கடந்த 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவுடன் நெருக்கிப்பழகிய துடுப்பாட்ட வீரரொருவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவருக்கு கொவிட் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.