இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 265,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 243,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 199,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,375 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.