இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் தாக்கம் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில், அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள குறித்த ஆலோசனை தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

அந்த ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பான ஆலோசனையின் ஒட்டுமொத்த மட்டம் தொடர்ந்தும் 3 இல் உள்ளது என்பதுடன், 2019 ஏப்ரலில் பயங்கரவாதம் தொடர்பில் வழங்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் அவ்வாறே உள்ளதாக நினைவில் கொள்வது அவசியமாகும்.

கொவிட்-19 தொற்று மற்றும் எரிபொருள், மருந்துகளின் தட்டுப்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தி இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறித்த அறிவித்தலில் தெரிவித்துள்ளது.