இரண்டு விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கடத்தப்பட்ட வாகனம்

-கிளிநொச்சி நிருபர்-

அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.50. மணியளவில் இனந்தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட வாகனம் A9 பிரதான வீதியூடாக சென்ற சமயம் வீதி போக்குவரத்து பொலிஸார் மறித்தபோதும் நிறுத்தப்படவில்லை.

ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் சோதனைக்காக நிறுத்திய போதும் நிறுத்தாமல், தொடர்ச்சியாக நிறுத்தாது சென்ற சமயம், இடை நடுவே ஹொரவ்பொத்தான வீதியில் இரண்டு விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு குறித்த வாகனம் தப்பி சென்றுள்ளது

இதனையடுத்து, அக்கராயன் பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து, ஹொரவப்பொத்தான பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அக்கராயன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.