இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.

இதைத்தொடர்ந்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருவுற்றிருந்த போது செய்த சோதனையில் இரட்டையர்கள் போன்றே தெரிந்துள்ள நிலையில் குழந்தை பிறந்த பின்னர் முழுமையான வடிவம் தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.