இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு
இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபத் கடந்த 8 ஆம் திகதி தமது 96 ஆவது வயதில் காலமானார்.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடி, 70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் காலமானார்.