இயந்திரக் கோளாறு காரணமாக மீனவர்களுடன் இந்தியாவில் கரையொதுங்கிய படகு
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரு மீனவர்கள் பயணித்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக தூத்துக்குடியில் கரை ஒதுங்கியுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த றொசான் (வயது 29), மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (வயது 26) ஆகிய இரு மீனவர்களே இந்தியாவில் கரை சேர்ந்துள்ளனர்
இவர்கள் தொடர்பில் இந்தியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.