இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அந்தந்த மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேலும், ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே காணப்படும் என்பதால் இன்று (06ஆம் திகதி) மதியம் 12.13 மணிக்கு உடுகம, நெலுவ, மடுவன்வெல, கும்பக்வெவ மற்றும் யால ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்