இன்றைய மின்தடை அறிவித்தல்

இன்று A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது.

P முதல் W வரையான வலயங்களில் மாலை 3.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது.

CC1 வலயத்தில் காலை 6.00 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.