
புதுவருடதின விபத்துக்களில் 412 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிகப்படனர் : ஆறுவர் உயிரிழப்பு
தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பதிவான பல்வேறு விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் 412 பேர் அனுமதிக்கப்பட்டதாக விபத்துப் பிரிவு இயக்குநர் வைத்தியர் இந்திகா ஜகோடா தெரிவித்துள்ளார்.
விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேர் அனுமதிக்கப்பட்டபோதே இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜகோடா, பதிவான பெரும்பாலான விபத்துக்கள் உட்புற விபத்துகளுடன் தொடர்புடையவை என்றும், சாலை விபத்துகள் காரணமாகவும் 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பட்டாசு தொடர்பான காயங்கள் குறைந்துள்ளதாகவும்; ஜகோடா தெரிவித்துள்ளார். பட்டாசு காயங்கள் காரணமாக இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்றும் மேலும் எந்த விபத்தும் தீவிரமானவை என்று தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்