ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கவில்லை – பொலிஸ்மா அதிபர்

ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கவில்லை, என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த அதிகாரிகள் இன்று காலை முன்னிலையாகினர்.

அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.