ஆயித்தியமலை தூய சதாசகாய மாதாவின் திருவிழா ஆரம்பம்
-வவுணதீவு நிருபர் –
கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சுரூப பவனி ஆயித்தியமலையை வந்தடைந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து முதலாம் நவநாள் திருப்பலியினை அருட்பணி பிறைனர் செலர் அடிகளார் மற்றும் அருட்பணி பேதுரு ஜீவராஜ் அடிகளாரும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
அன்னையின் இறுதிநாள் திருவிழா 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.