70,000 ஆடுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது
வேலைவாய்ப்பற்ற ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன் போது ஜம்னாபரி, கொட்டுகச்சி, போயர், சனான் ஆகிய ஆடு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பில் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப் பெறுவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்