அவிசாவளையில் தீ பரவல் – 45 பேர் பாதிப்பு

அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன.

தீவிபத்தினால், குறித்த லயன் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடியிருப்பின் 4 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்இ அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்