அரிசி விலை: ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க