அயர்லாந்து யுவதி இலங்கையில் துஷ்பிரயோகம்

சுற்றுலா வந்த அயர்லாந்து யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு ஆளான யுவதி, கடந்த 6ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலா சென்ற போது மூன்று இளைஞர்கள் செல்பி எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது, ​​இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கெமராவில் நேரலையாக பதிவாகியுள்ளது.

அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை அண்மையில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடந்ததையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.