அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது
அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக உனவடுன, யத்தெஹிமுல்ல பகுதியில் உள்ள மசாஜ் மையம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரையும் ஹபராதுவ பொலிஸார் நேற்று சனிக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் மற்றும் பணியாளர் இருவரும் 38 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மட்டுமல்லாமல், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அயர்லாந்து நாட்டுப் பெண், தனது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்று குறித்த மசாஜ் நிலையத்திற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மசாஜ் செய்யும் போது, சந்தேக நபர் தேவையற்ற முறையில் நடந்து கொண்டு குறித்த பெண்ணை துன்புறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹபராதுவ பொலிஸாரினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்