அனைத்து வலயங்களிலும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிப்பு

நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வலயங்களிலும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்  மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதேவேளை, மின்னுற்பத்திக்காக எரிபொருளை வழங்குவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கள் எழுத்துமூலமாக உறுதியளித்துள்ளன.

இதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் நேற்று கிடைக்கப்பெற்ற டீசலில் 12 ஆயிரம் மெற்றிக் டன் மின்னுற்பத்திக்காக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்தும் 6 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளது