அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கும் விசேட கோரிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களும் அருகிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு சென்று தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Shanakiya Rasaputhiran

தற்போது நாட்டிலுள்ள பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு முதல் முறையாக ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பன்றிக்காய்ச்சல் முதலில் மேல் மாகாணத்தில் பதிவாகியதாகவும், தற்போது ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இது பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே. கே. சரத் ​​தெரிவித்துள்ளார்.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad