அனுமதியின்றி அதிரடிப்படை, பொலிஸ் சீருடைகளை வைத்திருந்த இளைஞன் கைது

மாத்தறை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கபுகம – ஹெனகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான சீருடைகளை சட்ட அனுமதியின்றி வைத்திருந்த நிலையில் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் எந்தவொரு குற்றத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்