அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை-மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள், இன்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானையொன்று நுழைந்துள்ளதோடு, கிராம மக்கள் யானையை விரட்டியடித்துள்ளனர்.

அத்தோடு கையடக்க தொலைபேசியில் அந்த காட்சியை பதிவும் செய்துள்ளனர்.

இந்த யானையானது ஊருக்குள் நுழைந்து, வீடுகளிலுள்ள பயிர்களை சாப்பிடுவதற்கு முனைந்தபோது கிராம மக்கள் யானையை துரத்தி வெளியேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM