அணு ஆயுதம் தொடர்பில் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கும் இடையில் அணு ஆயுதங்கள் தொடர்பான வொஷிங்கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தென்கொரியாவில், அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நிலை நிறுத்துவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தென்கொரியாவை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் அமெரிக்காவின் முயற்சியாக இது கருதப்படுகின்றது.

குறித்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளினதும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்