அச்சுவேலி சந்தியில் இரு கார்கள் மோதி விபத்து
-யாழ் நிருபர்-
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை வேளையில், வல்லைப் பகுதியில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பும் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு பின்னால் வந்த கார் மோதியே விபத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
வல்லை வீதியில் முன்னால் சென்ற கார் சாரதிக்கு தொலைபேசி அழைப்பு வர அவர் தனது காரை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு தொலைபேசியில் கதைத்த போது பின்புறமாக வந்த கார் நிறுத்தி வைக்கப்பட்ட காரை மோதித் தள்ளியதுடன் கட்டுப்பாட்டை இழந்து பற்றைக்குள் பாய்ந்துள்ளது.
இதில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் பின் சில் உட்பட அதன் பகுதிகள் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பின்னால் வந்த கார் சாரதிக்கு வெயில் வெளிச்சம் கண்ணில் பட்டதால் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட காரை அவதானிக்க முடியவில்லை எனக் கூறியதாக தெரியவந்துள்ளது.