மாணவர்களை தொழில்துறைக்கு தயாராக்க – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்!
தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கணக்கியல் மற்றும் நிதித் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். ஷபானா ஆகியோரது மேற்பார்வையின் கீழ் “Industry Readiness: Future-Proofing Your Career for 2030 & Beyond” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இம்முயற்சி, Career Development பாடநெறியின் ஒரு பகுதியாகவும், மாணவர்களுக்கு தொழில் உலகின் தேவைகளை புரிந்து கொள்ளும் ஒரு முக்கியமான தளமாகவும் அமைந்தது.
இந்த நிகழ்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது எதிர்கால வேலைவாய்ப்பு திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் வழிகாட்டல்களை பெற்றனர்.
நிகழ்வின்போது விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எம். றியாத், எம்.பர்விஸ், ஏ.ஆர். பாத்திமா தபாணி உள்ளிட்ட பலர் பங்குகொண்டிருந்தனர்.