சிறப்புற இடம்பெற்ற யாழ். கலைஞனின் கூத்தாடி திரைப்பட பாடல் வெளியீடு
யாழ்ப்பாணம் இளவாலையை பிறப்படமாகவும் அவுஸ்ரோலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞன் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான கூத்தாடி முழு நீளத் திரைப்படத்தின் பாடல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சுமார் 2000 பேர் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த திரைப்படம் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படமாக திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் அதன் பாடல் வெளியீடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 (Australia Talent and Film International Award) நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளதோடு குறித்த திரைப்படம் 4 விருதுகளை தட்டிச் சென்றது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும், கதாநாயகனாக நடித்தும் வருகிறார்.
தென்னிந்தியா திரைப்பட இயக்குநர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் எங்கும் இந்த திரைப்படம் திரையிட தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.