ஆஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை வந்தார்
ஆஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உயர்மட்டக் கூட்டங்களுக்காக ஜூன் 2 முதல் 5 வரை திட்டமிடப்பட்ட நான்கு நாடுகளின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று இலங்கைக்கு வந்தார்.
பிரதிப் பிரதமரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வரவேற்றார்.
பின்னர் அவர் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக திரு. மார்லஸ் மாலத்தீவு, இந்தியா மற்றும் இந்தோனேசியாவுக்குச் செல்லவுள்ளார்..
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, பிரதிப் பிரதமர் இரு நாடுகளின் இறையாண்மை திறன் மேம்பாட்டிற்கான ஆஸ்திரேலிய ஆதரவைப் பற்றி பேசவுள்ளதாக அறியமுடிகிறது.
—