இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 317 ரூபா 91 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று திங்கட்கிழமை 318 ரூபா 30 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று திங்கட்கிழமை 328 ரூபா 93 சதமாக காணப்பட்டது.