லாப் (laugfs gas) சமையல் எரிவாயுவின் விலையும் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 3985 ரூபாய் என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.