மார்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உலக கிரிக்கட் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளின் சட்டதிட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாக இங்கிலாந்தின் பழைமை மிக்க மார்லிபோன் கிரிக்கெட் கழகம் காணப்படுகின்றது.
இந்த கிரிக்கட் அமைப்பின் தலைவராக கடந்த காலங்களில் குமார் சங்கக்கார செயற்பட்ட நிலையில், தற்போது குறிப்பிட்ட அமைப்பின் உலக கிரிக்கட் கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.