மனைவி விட்டுச்சென்ற வேதனையில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

கிரியெல்ல பகுதியில் மனைவி விட்டுச்சென்ற துயரத்தில் நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரியெல்ல – கதலுர பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த நபர் தனது குழந்தையுடன் மனைவியின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.