இரகசிய வாக்கெடுப்பு விபரம் சாயணக்கியனுக்கு எப்படித் தெரிந்தது – ஜனா

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரசேச சபையின் தவிசாளர் தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்த நிலையில், அவ்வேளையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது சாணக்கியனுக்கு எவ்வாறு தெரிந்தது. எமது கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பின் ஏனைய பிரதேச சபைகளின் தெரிவுகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டை சாணக்கியனால் எவ்வாறு முன்வைக்கமுடியும் என்று மு.பா.உ. கோ.கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பிலுள்ள அவருடைய இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவ் ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பின் ஏனைய பிரதேச சபைகளின் தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவுகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தெரிவில் இவ்வாறான குற்றச்சாட்டை சாணக்கியனால் எவ்வாறு முன்வைக்கமுடியும்.

உண்மையில் என்னுடன் பலர் பேசினார்கள் சாணக்கியன் என்னைத் தேடி வந்து பேசினார். அவரிடம் கேட்டேன் இவ்வளவு நாளும் வரவில்லை. இப்போதுதானா வருகின்றீர்கள் என்று என்ன முகத்துடன் உங்களிடம் வாரது என்று கேட்டார். அப்படியானால் எனக்கு எதிராக ஏதோ செய்திருக்கின்றார் என்ற காரணத்தினால்தான் அந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்கின்றார். அப்படியிருந்தும் அவருக்கு எங்களது உறுப்பினர் அவர்களுக்கு எதிராக வாக்களிப்பார் என்று கூறவில்லை. தற்போது தவிசாளராக தெரிவாகியிருக்கின்ற வினோராஜ் என்னை வந்து சந்தித்தார்.

நேற்றுக் காலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயர், இரண்டு வருடத்துக்குப் பின்னர் மேயராக வரவுள்ள போன்றோரும் தேடி வந்து பேசினார்கள். அவர்களிடமும் வாக்களிக்கமாட்டேன் என்று கூறவில்லை. இறுதி நேரத்தில் ஒன்றரை மணியளவில் சுமந்திரன் தொலைபேசியிலே பேசினார். நான் அவருக்கும் எதிராக வாக்களிப்போம் என்று கூறவில்லை.

ஆனால் அவர்களிடம் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர்கள் எந்தக் கோரிக்கைகளுக்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எந்த ஒரு சபையிலும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு முன்வரவில்லை. இன்று முஸ்லிம் காங்கிரசுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவைத் தேடிச் சென்று அவர்களிடம் ஆதரவு கேட்கிறார்கள். விக்னேஸ்வரன் அவர்களை மிகக் கேவலமாகத் தூற்றியவர்கள் அவரருடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். சஜித் பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கில் 106 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும் எங்களுடன் எந்தவிதமான உடன்பாட்டுக்கும் வருவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ஆனால், நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடிய இடங்களில் வாக்களித்துக் கொண்டுவருகின்றோம். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நேற்று திறந்த வாக்களிப்பு கோரியிருந்தால் அவர்களுக்கு அந்த உண்மை தெரிந்திருக்கும். அதை விடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை, தேவையற்ற விமர்சனங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தமக்குச் சாதகமாகப் பலரை வளைத்தெடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் வேட்பாளரும் பண பலம் படைத்தவர், அவரும் அவ்வாறான முயற்சிகளைச் செய்திருக்கலாம். அவ்வாறிருக்கையில் நீங்கள் ஏன் இரகசிய வாக்கெடுப்புக்குச் சென்றீர்கள்.
இங்கு கலாசாசரம் மாறியிருக்கின்றனது. பிரதேச சபைகளை அமைப்பதற்குக்கூட பணம், நலன் சார்ந்து பல டீல்கள் நடைபெறுகின்றன.
இன்று வாழைச்சேனை பிரசேத சபையின் தெரிவின் போது தமிழரசுக்கட்சிக்கு சாதகமாக வாக்களித்ததற்கு சாணக்கியன், நேற்றைய சம்பவத்திற்கு பயந்து இன்று வாக்களித்ததாக கூறியிருக்கின்றர். அப்படியானால் நேற்றுக் காலை ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தெரிவில் உங்களுக்கு ஆதரவான உறுப்பினர்வாக்களிக்காமல், வைத்தியசாலையில் போய் படுத்திருக்கையில் எமது உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தது எப்படி என்பது என் கேள்வி.
இறால் தன் தலைக்குள் எதையோ வைத்துக் கொண்டு நாறுது, மணக்குது என்று கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை, தங்களுடைய கட்சிப்பிரச்சினைகளை இப்போது நீதிமன்றம் வரை கொண்டு சென்றுவிட்டு என்னை என்னுடைய கட்சியிலிருந்து இடைநிறுத்த வேண்டுமென்று சவால் விடுவதற்கு நீங்கள் யார். உங்களுக்கென்ன அருகதையிருக்கிறது.
நான் என்னுடைய கட்சிக்கு எதிராக செயற்பட்டால் எனது கட்சி எனக்கு நடவடிக்கை எடுக்கும். நீங்கள் யார் அதைக் கேட்பதற்கு, அந்த அதிகாரத்தை யார் தந்தது. முதலில் உங்களது கட்சிக்குள் இருந்து கொண்டு உங்கள் கட்சிக்கெதிராக உங்களது கட்சியால் நடவடிக்கை எடுங்கள். மற்றைய கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதனை எட்டிப்பார்க்க வேண்டாம். ஏன்னைப் பொறுத்தவரையில் 43 வருடங்களாக ஒரே கட்சியில் ஒரே கட்சியில் ஒரே கொள்கையில், ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி, அகிம்சைப் போராட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் போராட்டமாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசியத்துக்காகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். ஏனையவர்களைப் போன்று குரங்கு போல் அங்குமிங்கும் தாவித் திரிபவன் நானல்ல.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசியம் என்றால் என்ன, தமிழ்த் தேசியம் என்றால் என்ன? இந்தப் போராட்டத்தினால் ஏற்பட்ட இழப்பு என்ன, தமிழ் மக்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே, கதிரைக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களைத் தூற்றுவதையோ அல்லது விமர்சிப்பதையோ விடுத்து நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இறுதியாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நீங்கள திறந்த வாக்கெடுப்புக்குச் சென்றிருந்தால் தெரிந்திருக்கும் எங்களது உறுப்pபனர் யாருக்கு வாக்களித்தார். அல்லது உங்களுக்குள்ளே யார் கறுப்பாடு இருந்திருக்கும் என்பதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்பதை உங்களுக்குக் கூறி வைக்க விரும்புகின்றேன்.