Sri Lanka Tamil News Site

விசேட தேவையுடையோர் வாசகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீராவோடை பொது நூலகத்தில் விசேட தேவையுடையோர் வாசகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்

- Advertisement -

-வாழைச்சேனை நிருபர்-

 

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீராவோடை பொது நூலகத்தில் விசேட தேவையுடையோர் வாசகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 யினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மீராவோடை பொது நூலகத்தில் ‘அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்வுகள் நூலகர் க.ருத்திரன் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

- Advertisement -

அதன் ஒரு நிகழ்வாக இன்று வியாழக்கிழமை விசேட தேவையுடவர்களின் மன உள விருத்திக்கான கருத்தரங்கும் அவர்களை வாசகராக நூலகத்தில் சேர்த்துக் கொள்ளல் மற்றும் அறிவூட்டல் நிகழ்வும் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது விசேட தேவையுடையவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

குறிப்பாக விசேட தேவையுடையவர்களினை எவ்வாறு பராமரிப்பது, உடல் நலம் என்பன தொடர்பான சுகாதார விடயங்கள் மற்றும் அவர்களுக்குரிய தேவைகள் தொடர்பாகவும் அறிவுரைகள் விரிவுரையாளர்களினால் வழங்கப்பட்டது.அத்துடன் நூலகத்தில் வாசகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் முகமாக அவர்களது வீடுகளுக்கு சென்று நூல்களை வழங்கும் முகமாக நடமாடும் இரவல் சேவை நடைமுறையும் அதிதியாக கலந்து சிறப்பித்த தவிசாளர் ஏ.எம்.எம்.நௌபர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆகியோர்களினால் அங்கத்துவ படிவம் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு அனுசரணையினை ‘அவிசன்னா குளோபல் பல்கலைக் கழகம்’ வழங்கியிருந்தது. வளவாளர்களாக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் ஏ.கே.எம்.அசாம்,அவிசன்னா குளோபல் பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பாளர் ஏ.பி.எம்.மர்வான்,கற்கை நெறிக்கான இணைப்பாளர் எம்.ஜ.பாகீர் முகமட் ஆகியோருடன் ஊக்கமூட்டும் பேச்சாளர் ஜோசப் சிவில்ராஜ் மற்றும் சிகரம் மாற்றுத் திறனாளிகளின் அமைப்பின் தலைவர் எஸ்.ஜ.தௌபிக் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!