லங்கா சதொச நிறுவனம் நாளை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டு 650 ரூபாவிற்கும், உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 545 ரூபாவிற்கும், ஒரு கிலோ பயறு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1100 ரூபாவிற்கும், ஒரு கிலோ நெத்தலி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1090 ரூபாவிற்கும், ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.