இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்கள் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 32 இந்திய மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் நேற்றிரவு மன்னார் நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.