புத்தளம் லகூன் அமைப்பினால் ( Lagoon Team Puttalam ) ஏற்பாடு செய்யப்பட்ட, புத்தளம் லகூன் அமைப்பின் உறுப்பினர் தில்லையடியை சேர்ந்த L.A.M. நப்fஸானின் இலங்கை முழுவதுமான சைக்கிள் சுற்றுப்பயண நிகழ்வொன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
போதைப்பாவனையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்தல், வாகன விபத்துக்களில் இருந்து சாரதிகளையும், பாதசாரிகளையும் பாதுகாத்தல் மற்றும் இலங்கை சுற்றுலா துறையினை மேம்படுத்துதல் போன்ற மூன்று கருப்பொருட்களை சுமந்தவாறு, 25 மாவட்டங்களை தொடும்நோக்கில் இறைவனின் துணையுடன் நமது சாதனையாளர் L.A.M. நப்fஸான் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில், இந்த நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் நகர சபை செயலாளர் L.B.G. பிரீத்திகா, புத்தளம் சாதனையாளன், லகூன் அமைப்பின் உறுப்பினர், தில்லையடியை சேர்ந்த L.A.M. நப்fஸானை வாழ்த்தி, கொடியசைத்து இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .


