நேற்றையதினம் வியாழக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைவடைந்திருந்த நிலையில் இன்று வெள்ளி கிழமை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 174,300 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 159,800 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,550 ரூபாவாகவும் இன்றையதினம் வெள்ளி கிழமை பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.