2023ம் ஆண்டின் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 18.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தமையினால் 2 236.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணி ஏற்றுமதியானது 4.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதால் 172.4 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மாத்திரம், ஆடை ஏற்றுமதி 25.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.