-யாழ் நிருபர்-
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.