முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் சராசரி மொத்த விற்பனை விலை ஜூலை முதல் ஒகஸ்ட் வரை 20 வீதம் வரை உயர்ந்துள்ளதால் டிசம்பர் 31ஆம் திகதி வரை வெங்காயத்திற்கு 40 வீதம் வரை வரியை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஏற்றுமதி வரி இலங்கை, பங்காளதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளை பாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.