விவேகானந்த சபையினால் 05.11.2023 அன்று நடத்தப்படவிருக்கும் அகில இலங்கை சைவ சமயப்பாடப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம், கையேடு என்பன பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிவித்தல் கிடைக்காத பாடசாலைகள் மற்றும் புதிதாக இணையவிரும்பும் பாடசாலைகள், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் சபையின் பரீட்சை கிளையின் வட்சப் 077-7266461 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டால் இலவசமாக விண்ணப்பப்படிவங்கள் கையேடு-2023 திருக்குறள் வழிகாட்டி, நாவலர் வினாவிடை என்பன அனுப்பி வைக்கப்படும்.
கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் தேவைப்படுவோர் வட்சப் மூலமாக, பாடசாலை ஊடாகவோ, நேரடியாகவோ விண்ணப்பித்தால் (டிஜிட்டல் முறையில் Pdf) இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
2023லிருந்து மொத்த பரிசில்கள் ரூபா பத்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இரு தங்கப்பதக்கம் உட்பட 1000 பரிசில்கள், வழங்கப்படும். மேலும் இவை பிராந்திய ரீதியாகவும் வழங்கப்படும். ஏ பிலஸ் (A+) 95 புள்ளி பெறும் சகல மாணவர்களுக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்படும் எனவும் சு.சிவசண்முகநாதன் பரீட்சைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப முடிவுத் திகதி 30.09.2023 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
