பிரான்சில் உள்ள அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்து கொண்ட 700 ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட பலருக்கு வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்க்கான காரணம் விருந்தில் ஏற்பட்ட உணவு விஷம் என சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனமான ஏர்பஸ் குழுமத்தைச் சேர்ந்த அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் ஐந்து நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது, மேலும் 15,000 க்கும் மேற்பட்டோர் அங்கு பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.