நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகலை மாவட்டத்திலும், மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.