பொரளை விஜேராம ஹோட்டன் பிளேஸ் பகுதியில் அதி சொகுசு ஜீப் ஒன்று இன்று செவ்வாய் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் விஜேராம வீதியிலிருந்து கொள்ளுப்பிட்டி திசையை நோக்கி திரும்பும் போது வீதியை விட்டு விலகி மதில் மேல் மோதி விபத்துக்குள்ளானதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேத விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் கறுவா தோட்ட பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.