புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் வாகன விபத்து தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு பயணித்துகொண்டிருந்த போது கொஸ்வத்த, ஹல்தடுவானாவில், பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது காரின் சாரதியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.









