வாகனங்கள் அல்லாத பிற எரிபொருள் தேவைகளை பதிவு தேசிய எரிபொருள் கடவு (QR Pass) முறைமையில் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) இன்று அறிவித்துள்ளது.
ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற வானகம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கு QR மூலம் எரிபொருளை விநியோகிக்கும் முறை இப்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக ICTA தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பதிவு செய்யும் முறை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்மேலும் தெரிவித்துள்ளது.