இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.
அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 307 ரூபாவில் இருந்து 305.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 322 ரூபாவில் இருந்து 320.61 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 306 ரூபாவிலிருந்து 307.58 ரூபாவாக அதிகரித்துள்ள அதே வேளை விற்பனைப் பெறுமதி 322 ரூபாவாக மாற்றமடையாமல் காணப்படுகிறது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக மாற்றமடையாமல் காணப்படுகின்ற அதே வேளை விற்பனைப் பெறுமதி 320 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.