கடந்த வாரம் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிதளவு உயர்ந்துள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285.14 முதல் ரூ.284.17, விற்பனை விகிதம் ரூ. 300.48 முதல் ரூ. 299.45 ஆக பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285.81 முதல் ரூ.283.83 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 300 முதல் ரூ. 298 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 286 முதல் ரூ. 285 ஆகவும், விற்பனை விலை ரூ. 298 முதல் ரூ. 297. ஆகவும் பதிவாகியுள்ளது.


